அன்னுார் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
                              ADDED :3254 days ago 
                            
                          
                           அன்னுார்: குமரகவுண்டன்புதுாரில், பழமையான விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.
இதையடுத்து கும்பாபிஷேக விழா (3ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று இரவு முதற்கால யாக பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தலும், நடக்கிறது. 5ம் தேதி காலை 6:15 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன் மூலாலயங்களுக்கும், கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா அபிஷேகம், தச தரிசனம் நடக்கிறது. மூன்று நாட்களும் வேத ஆகம பாராயணம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.