உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவில் சங்காபிஷேக விழா

கைலாசநாதர் கோவில் சங்காபிஷேக விழா

ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை சோமவார சங்காபிஷேக விழா, வரும், 5ல், நடக்கிறது. ராசிபுரம் கைலாசநாதருக்கு, ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விழாவாக, சங்காபிஷேக விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா வரும், 5ல், நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, கைலாசநாதர் பரமேஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு, அபிஷேகம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு,7:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் ஆலயம் வலம் வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !