உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடல் முழுவதும் சேறு பூசி நகர்வலம் வரும் மக்கள்

உடல் முழுவதும் சேறு பூசி நகர்வலம் வரும் மக்கள்

தாண்டிக்குடி: தாண்டிக்குடியில், உடல் முழுவதும், சேறு பூசி, சேத்தாண்டி வேடமிட்டு, நகர்வலம் வரும் வினோத விழா நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் முத்தலாம்மன், பட்டாளம்மன் கோவில் விழாவில், பக்தர்கள், உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொள்வர். சேத்தாண்டி வேடமிட்டவர்கள், உறவு முறை அடிப்படையில் வண்ணங்களை பூசி, வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசிப்பர். மண் சேறு பூசுவதால் நோய்கள் குணமாவதோடு, விவசாயம் செழிக்கும் என, மக்கள் நம்புகின்றனர். கோவில் மேலாளர் இளங்கோவன் கூறுகையில், ‘‘உடலில் மண் சேறு பூசுவதால், சகல நோய்கள் நீங்குகிறது. குறிப்பாக, தோல் நோய் குணமடைகிறது. சீனாவில் மண் குளியல் சிகிச்சைக்கு ஏராளமானோர் செல்கின்றனர். சேத்தாண்டி வேடத்தை நேர்த்திக்கடனாக போடுகின்றனர்,’’ என்றார். பக்தர் புருஷோத்தமன் கூறும் போது, ‘‘தொடர்ந்து,30 ஆண்டுகளாக, சேத்தாண்டி வேடமிட்டு வருகிறேன். உறவினர்களுக்கு வண்ணங்கள் பூசி, வட நாட்டு, ‘ஹோலி’ பண்டிகை போன்று, உற்சாக நடனமாடுவது, உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !