உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓங்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஓங்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஓமலூர்: பல்பாக்கியில், ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஓமலூர், பல்பாக்கியில் உள்ள பழமையான செல்வவிநாயகர், ஓங்காளியம்மன், மகா மாரியம்மன் ஆலயங்கள் புனரமைக்கப்பட்டு, கோபுர கலசங்கள், மூலவர் சன்னதிக்கு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கோவில்களிலும், மூலவர் சன்னதி கோபுரம், ராஜகோபுரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க, காலை, 9:50 மணிக்கு, சிவாச்சாரியார்கள் மூலம், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீயணைப்பு துறை உதவியுடன், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !