பவானி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் பிரதிஷ்டை
ADDED :3264 days ago
பவானி: பவானி, ஜம்பை கிராமம், பெரியவடமலைபாளையம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில், நூதன பரமபதவாசல் (சொர்க்கவாசல்) பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாக வேள்வி, மஹா பூர்ணாஹுதி நடந்தது. இதை தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு, பரமபதவாசலுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
அடுத்து, மூலவரான லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.