உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த சிவன் கோவில் ஒருகால பூஜையாவது நடக்குமா?

சிதிலமடைந்த சிவன் கோவில் ஒருகால பூஜையாவது நடக்குமா?

குளித்தலை: மேட்டு மருதூர் சிவன் கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால், இந்துசமய அறநிலையத்துறையினர், ஒருகால பூஜைக்காவது ஏற்பாடு செய்ய, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்., மேட்டு மருதூரில், 1,112 ஆண்டுகள் பழமையான, ஆறா அமுதீஸ்வர் கோவில் உள்ளது. இந்தசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முறையான பராமரிப்பு இல்லை. கோவிலுக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மூலம் வரும் வருவாயை கொண்டு, கோவில் நிர்வாகம் சார்பில், ஒருகால பூஜை கூட நடப்பதில்லை. முக்கிய நாட்களில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடக்கிறது. கரூர் மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த வெங்கடேசன், இக்கோவிலை பார்வையிட்டு, தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகவும், சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஆனால், பூர்வாங்க பணிகள் எதுவும் நடக்கவில்லை. அடுத்தடுத்து வந்த கலெக்டர்களும், கோவில் புனரமைப்பு, ஒருகால பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. எனவே, இந்துசமய அறநிலையத்துறையினர் தலையிட்டு, கோவிலில், ஒருகால பூஜையாவது நடக்க, ஏற்பாடு செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !