வண்டிமேடு கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :3267 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு தேவி நகரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை யொட்டி நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராரர்ப்பணம், கும்ப அலங்காரம், முதல்கால யாகபூஜை, பூர்ணாஹூதி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை ேஹாமம், திரவ்யாேஹாமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார் சந்திரசேகர் தலைமையில் ரமேஷ் நடராஜ குருக்கள், கோபி ஆகியோர் செய்து வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நிர்மலா அம்மாள் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.