உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் முதல்வர் ஜெ.,வுக்கு மோட்ச தீபம் ஏற்றினர்

ராமேஸ்வரம் கோயிலில் முதல்வர் ஜெ.,வுக்கு மோட்ச தீபம் ஏற்றினர்

ராமேஸ்வரம்: ஜெ., ஆன்மா சாந்தியடைவதற்காக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மோட்ச தீபம் ஏற்றினர். திருக்கோயிலில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், அதிகாரிகள் கக்காரின், ராஜாங்கம், அண்ணாதுரை, கமலநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக ஜெ.,மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் அக்னி தீர்த்த கடற்கரையில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் கடலில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவர் அர்ச்சுணன், துணை தலைவர் குணசேகரன், நகர் செயலாளர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !