கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3268 days ago
கரூர்: ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில், கும்பாபிஷேக விழா நடந்தது. கரூர், எல்.வி.பி., நகர், நாவல் நகரில் உள்ள சக்திவிநாயகர் மற்றும் கருப்பண்ணசாமி கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமம், தனபூஜை, முதல்கால யாகபூஜை, யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி, தீபாராதனை, கோபுரக் கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து காலை, 3:30 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, கோபூஜை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல், ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் உள்ள காளியம்மன் கருப்பண்ணசாமி கோவில், மண்மங்கலம் வட்டம், புஞ்சைகடம்பங்குறிச்சி பால்வார்பட்டி செல்வவிநாயகர், பாலமுருகன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.