குளம், கடல், அருவி போன்ற இடங்களில் உள்ள கோவில்கள் பிரபலமாக இருப்பது ஏன்?
ADDED :3324 days ago
குளம், கடல், அருவி போன்றவை கோவில் வரலாற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். உதாரணமாக ராமேஸ்வரம் கோவில் வரலாற்றுடன் தொடர்புடையது கடல். அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். குற்றாலம் கோவில் அருவியுடன் தொடர்புள்ளது. கும்பகோணம் கோவில் மகாமகக்குளத்துடன் தொடர்புள்ளது. தீர்த்த மகிமையால் கோவில்களும், கோவில் மகிமையால் தீர்த்தங்களும் பிரபலமாக இருப்பதற்கு புராண வரலாற்றுச் செய்திகளே அடிப்படை காரணம்.