திருவண்ணாமலை தீப விழா: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா!
ADDED :3408 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் ஐந்தாம் நாள் உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.