மந்தைகுளம் கருப்புச்சாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3268 days ago
வடமதுரை, வடமதுரை அருகே மந்தைகுளம் கரையில் கருப்புச்சாமி, சப்தகன்னிமார் கோயில் உள்ளது. இக்கோயிலை சமீபத்தில் பொதுமக்கள் புதுப்பித்தனர். இதையடுத்து கும்பாபிஷேகம் விழா துவங்கியது. 2 நாட்களுக்கு முன் காலை விநாயகர் வழிபாடுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நிறைவுற்றதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன், சவுந்தரராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் பாலாஜி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.