சிந்துவம்பட்டி ஈரம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3330 days ago
தேவதானப்பட்டி, சிந்துவம்பட்டி ஈரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி முதல்நாள் கோயில்புரம் பெத்தனதொழுவில் அனுக்ஞை வழிபாடு,சிந்துவம்பட்டி கோயில் வளாகத்தில் மங்கல இசை, விநாயகர் வழிபாடு, வருணபூஜை, இரண்டாம் நாள் விநாயகர் வழிபாடு, 2 ம்கால யாக பூஜைகள் தீபாராதனை, தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிவம் விஷ்வநாத சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். ஊர் நாட்டாமை பெருமாள் நாயக்கர்,விழாக்குழுத் தலைவர் கோபால், செயலாளர் கனகராஜ், பொருளாளர் அய்யலுச்சாமி, ஊர் பெரியதனம் பாண்டி, லட்சுமணன், பூஜாரிகள் பெருமாள், காளிமுத்து விழாக்குழுவினர்கள் சீனி, செல்வராஜ், பழனிச்சாமி, சரவணன் மற்றும் எர்ரகுலராஜ கம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர், பக்தர்கள் பங்கேற்றனர்.