உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழா

ஈரோடு மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழா

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா நேற்று இரவு நடந்தது. ஈரோடு, கருங்கல்பாளையத்தில் எழுந்தருளியுள்ள, சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, கடந்த, 4ல் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடந்தது. பின்னர், கோவில் கரகம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் விழா, நேற்று இரவு, 7:00 மணிக்கு நடந்தது. முறையாக பூசாரிகள், கம்பத்தை தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள் கம்பத்தின் மேல் உப்பு, மிளகு வீசினர். இன்று மஞ்சள் நீராட்டும், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !