காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3268 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி காளியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, சின்னமாரியம்மன் கோவில் தெருவில், ஊர் பொதுமக்கள் சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில், காளியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை, 8:00 மணிக்கு தீர்த்தக்குட ஊர்வலம், மாலை, 4:30 மணிக்கு மேல் கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு யாகசாலை பூஜை, 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, இரவு, 12:45 மணிக்கு மூலவருக்கு அஷ்டபந்தனம் உள்ளிட்ட பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:15 மணிக்கு மேல், 8:15 மணிக்குள், காளியம்மனுக்கு மஹா கும்பாபி?ஷகம் நடக்கிறது. 9:00 மணிக்கு அபி?ஷகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது.