உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னதானம்,ஊழியர்கள் சாப்பாடு : ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க திட்டம்

அன்னதானம்,ஊழியர்கள் சாப்பாடு : ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க திட்டம்

சபரிமலை: சபரிமலையில் அன்னதானம் மற்றும் இங்கு பணிபுரியும் ஊழியர்களின் சாப்பாடு ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.சபரிமலையில் இந்த ஆண்டு தனியார் அன்னதானம் முழுமையாக தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் தேவசம்போர்டு சார்பில் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய அன்னதானம் மண்டபம் மாளிகைப்புறம் கோயில் பின்புறம் திறக்கப்பட்டு அங்கு இடைவிடாது அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு தேவசம்போர்டு மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் தேவசம்போர்டு மூன்று நேரமும் உணவு வழங்குகிறது.இதனால் இரண்டு இடங்களில் உணவு சமைக்கும் பணி இடைவிடாது நடைபெறுகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக ஒரே இடத்தில் இணைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போதைய புதிய அன்னதான மண்டபத்தின் பின்புறம் புதிதாக சமையலறை கட்டும் பணி தொடங்கி உள்ளது.இங்கு இரண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சமையல் நடைபெறும். அன்னதான மண்டபத்தின் கீழ் பகுதியில் பக்தர்களுக்கும், முதல் தளத்தில் ஊழியர்களுக்கும் உணவு வழங்கப்படும்.புதிய கட்டுமான பணிகளுக்கு ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !