உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சுயம்பு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள வெள்ளோட்டில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. கடந்த மாதம், 22ல், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அடுத்து, 29 இரவு, கோவிலின் முன், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பொங்கல் விழா நேற்று காலை தொடங்கியது. காலை, 10:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, அதை தொடர்ந்து, ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று, (டிச., 8) மாலை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !