சபரிமலை பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார்
ADDED :3273 days ago
சபரிமலை: சபரிமலையில் மூன்றாம் கட்டமாக நேற்று, கூடுதல் போலீசார் பணியேற்றனர்.சபரிமலையில் மண்டல- மகரவிளக்கு காலம் ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்படுகின்றனர். இரண்டு கட்ட பணி நிறைவு பெற்று, மூன்றாம் கட்டமாக போலீசார் நேற்று பணியேற்றனர். இதில் 14 டி.எஸ்.பி., 25 இன்ஸ்பெக்டர், 105 எஸ்.ஐ., மற்றும் 1,150 போலீசார் உள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படை வீரர்கள் 165 பேர், தேசிய பேரழிவு நிவாரணப்படையின் வீரர்கள் 53 பேர், ஆந்திர மாநில போலீசார் 30 பேர் பணியில் உள்ளனர்.தனி அதிகாரியாக புனலுார் உதவி எஸ்.பி., கார்த்திகேயன் கோகுலசந்திரன் பொறுப்பேற்றார். டிச.,15 முதல் 30 வரை கம்ப்யூட்டர் பிரிவு எஸ்.பி., விஜயகுமார் தனி அதிகாரியாக செயல்படுவார். பம்பையில் 10 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர், 75 எஸ்.ஐ., 850 போலீசார் பணியேற்றனர்.