உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கமேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ.9.66 லட்சம்

சங்கமேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ.9.66 லட்சம்

பவானி: சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில், 9.66 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 30 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. பொள்ளாட்சி கல்யாண விநாயகர் சேவை குழுமத்தினர், பவானி அரசு பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள், பவானி மனவளக்கலை மன்றத்தினர் மற்றும் கோவில் பணியாளர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், ஒன்பது லட்சத்து, 66 ஆயிரத்து, 811 ரூபாய், 49 கிராம் தங்கம், 113 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. செல்லாத நோட்டுகள் மிக குறைந்த அளவே இருந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !