ஊத்துக்கோட்டை கால பைரவருக்கு அஷ்டமி பூஜை
ADDED :3268 days ago
ஊத்துக்கோட்டை: கால பைரவருக்கு நடந்த அஷ்டமி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது கால பை ரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் அஷ்டமிநாளில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடை பெறும். நேற்று முன்தினம் இரவு, அஷ்டமி தினத்தை ஒட்டி, மூலவர் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைநடந்தது. பின், சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைநடந்தது. இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.