உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி கோயிலில் அன்னாபிஷேகம்

அபிராமி கோயிலில் அன்னாபிஷேகம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி ஆதிசுயம்பு ஈஸ்வரர் சமேத அபிராமி கோயிலில் சிறப்பு பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம்,இளநீர், பன்னீர், திருமஞ்சணம், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து அன்னாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சிவபுராண ஏடு, பெண்களுக்கு மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. உதயகுமார் சிவாச்சாரியார் உள்ளிட்ட அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !