அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை
ADDED :3269 days ago
ஊத்துக்கோட்டை: அய்யப்ப சுவாமிக்கு,47ம் ஆண்டு, விளக்கு பூஜை, ஊத்துக்கோட்டையில், இன்று, 9ம் தேதி துவங்க உள்ளது. ஊத்துக்கோட்டையில், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், அய்யப்ப சுவாமி சன்னிதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம், மாலை அணிந்து, விரதமிருக்கும் அய்யப்ப பக்தர்கள், அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இன்று, 47ம் ஆண்டு விழா, காலை, 4:30 மணிக்கு கணபதி பூஜையுடன் இரண்டு நாள் விழா துவங்குகிறது.