அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன் தி.மலையில் பரணி தீபம் ஏற்றம்!
திருவண்ணாமலை: தீப திருவிழாவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது . மாலையில் 2,668 அடி உயர மலையில் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய திருவிழாவான இன்று மாலை 6:00 மணிக்கு மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், சமேத வள்ளி தெய்வானை முருகர், சமேத உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பரணி தீபம்: அதனை தொடர்ந்து ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் ஸ்வாமி மூல கருவறையில் கற்பூர தீபம் ஏற்றி, முரளி குருக்கள் தலைமையில், சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, வேத மந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் சுவாமி மூல கருவறையில் எதிரில் ஐந்து மடக்குகளில் அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை கோவில் குருக்கள் டி.எஸ். குமார் கையில் ஏந்தியவாறு கோவில் பிரகாரம் முழுவதும் சென்று, இந்த சிவ-சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை விளக்கும் வகையில், அம்மன் கோவில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டது. மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 6 மணிக்கு அனேகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மஹா தீபம்: இதனை முன்னிட்டு மாலை 4:30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். சரியாக மாலை 5.59 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடியவாறு பக்தர்களக்கு ஒரு நிமிடம் காட்சியளிப்பர். அந்த வேளையில், சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின் ஐந்து அகல் விளக்குகளையும் கொண்டு வந்து கொடிமரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்படும். அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அவற்றை 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பித்தபின் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இவை தொடர்ந்து 11 நாட்கள் எரியும், 40 கி.மீ தூரம் வரை மஹா தீப ஜோதி தரிசனம் பார்க்க முடியும். அர்த்தநாரீஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மட்டுமே மஹா தீபதன்று மட்டுமே கோவில் கொடி மரம் அருகே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்துவிட்டு செல்வார். இதனை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக உள்ளன.
பாதுகாப்பு பணியில் 9 ஆயிரம் போலீசார்: பக்தர்களின் பாதுகாப்பு பணியில் 4 ஐ.ஜி., 4 டி.ஐ.ஜி,18 எஸ்.பி., 20 ஏ.டி.எஸ்.பி., 80 டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலினுள் வரும் பக்தர்கள் பலத்த சோதணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். நகரை சுற்றி 18 சோதணை சாவடி, 61இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், 16 தற்காலிக பஸ் நிலையம், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் 35 கண்காணிப்பு கோபுரம், 39 ட்ச்தூ ஐ டஞுடூணீ தணித மையம்,குற்ற விழிப்புணர்வு குறித்து ஒரு லட்சம் நோட்டீஸ்கள் விநியோகம், 147 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 100 சிறப்பு படை(ண்ணீஞுஞிடிச்டூ tச்ண்டு ஞூணிணூஞிஞு ) மலையேறும் பக்தர்களுக்கு உதவியாக செயல்பட்டுள்ளனர்.
2 குட்டி விமானங்கள்: பாதுகாப்பு பணியில் 2 குட்டி விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய அளவிலான குட்டி விமானம் ஆயிரம் அடி உயரத்திலிருந்து திருவண்ணாமலை நகர் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள 10 கி. மீ வரையிலும்,இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் முப்பரிமாண முறையில் துல்லியாக காட்டும். சிறிய அளவிலான குட்டி விமானம் கோவில் வளாகம் முழுவதும் 25 ஏக்கர் பரப்பளவிற்கு 300 அடி உயர தூரத்தில் பறக்க விடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதனால் எங்கெங்கு மக்கள் அதிகமாக கூடியுள்ளனர். அங்கு கூட்டத்தை வேறு வழியில் திருப்பி விட நடவடிக்கை எடுத்தல், வாகன போக்குவரத்து நெரிசல், ஆகியவையும் சரி செய்ய முடியும்.தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் தலைமையிலான குழுவினர், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் கேமரா வைத்து, தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2,600 சிறப்புப் பேருந்துகள், 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபத் திருவிழாவை காண 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலை மீது வனத்துறை, காவல் துறை இணைந்து பக்தர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். நகர் முழுவதும் 13 மருத்துவ முகாம்கள், 3 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, 108 ஆம்புலன்ஸ் 24 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 2, 600 சிறப்புப் பேருந்துகள் மூலம் 7 ஆயிரம் நடைகள் இயக்கப்படுகின்றன. 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிரிவலப் பாதை குறித்த வரைபட பேனர்கள் 65 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.