உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்தளூர் மணம்புரீஸ்வர் கோவில் கோபுரம் சீரமைக்கும் கிராம மக்கள்!

இந்தளூர் மணம்புரீஸ்வர் கோவில் கோபுரம் சீரமைக்கும் கிராம மக்கள்!

இந்தளூர்: தொல்லியல் துறைக்கு சொந்தமான, சிதிலமஅடைந்த மிக பழமையான, இந்தளூர் மணம்புரீஸ்­வர் கோவிலை , அப்பகுதிவாசிகள் சீரமைத்து வருகின்றனர். சித்தாமூர் ஒன்றியம், இந்தளூரில், 500 ஆண்டுகள் பழமையான மணம்புரீஸ்வர் கோவில் உள்­ளது. இக்கோவில் மணம்புரீஸ்­வர் என, பெயர் பெற்றுள்­ளதால், திருமணதடை இருப்பவர்கள் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக, இக்கோவில் கோபுரம் மற்றும் கோவில் முழுவதும் செடிகள் வளர்ந்து பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், கோவிலை சீரமைக்க முடிவு செய்த கிராமவாசிகள், நன்கொடை வசூலித்து, கோவிலை புனரமைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !