ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் கவுசிக ஏகாதசி
ADDED :3268 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு வடபத்ரசயன சன்னதி திருவோண மண்டபத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்களுக்கு 108 பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் துவங்கி அதிகாலை நான்கு மணிவரை நடந்த இந்நிகழ்ச்சியில் வேதபிரான் அனந்தராமன் மற்றும் சுதர்சனபட்டர் புராணம் வாசித்தனர். அரையர் சேவை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜ் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.