ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பரணி தீபம்
ADDED :3245 days ago
வேலூர்: வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோவிலில், ஞாயிறு கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு நந்திக்கு பால், தயிர், சந்தனம், பன்னிர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் பூக்கள், அருகம்புல்லால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கார்த்திகை தீபத்தையொட்டி, ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.