சாணார்பட்டி கோயில்களில் கார்த்திகை விழா
ADDED :3319 days ago
நத்தம்: நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் உள்ள கோயில்களில் கார்த்திகையை முன்னிட்டு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பால், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. மாலையில் பக்தர்கள் தீபம் ஏற்றி சுவாமி சுவாமி தரிசனம் செய்தனர். நத்தம் மாரியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் மற்றும் பகவதியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. சாணார்பட்டி, தவசிமடை ஒடுக்கம் உள்ளிட்ட பகுதி கோயில்களிலும் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.