திருமலை ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீபம்
ADDED :3245 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.திருமலையில், ஆண்டு தோறும், கார்த்திகை மாத பவுர்ணமியின் போது, கோவில் முழுவதும், 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி, ஏழுமலையான் கருவறை, யோக நரசிம்மர் சன்னிதி, பாஷ்யக்காரர் சன்னிதி, ஆஞ்சநேயர் கோவில், வராக சுவாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் உட்புறத்தில் ஊழியர்கள், 1,008 நெய் தீபங்களை ஏற்றினர். பின், ஏழுமலையான் கோவில் எதிரில் சொக்கப்பனை கொளுத்தப் பட்டது.