உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசன நிகழ்ச்சி

லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசன நிகழ்ச்சி

செஞ்சி: செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 5:௦௦ மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதா செல்வாம்பிகை கவசம், விசேஷ திரவிய ஹோமம், லலிதா செல்வாம்பிகை 1008 மந்திரங்கள் படிக்கப்பட்டன. இரவு 9:௦௦ மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசநீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு 12:௦௦ மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. இதில் அறங்காவலர் கன்னியப்பன், கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !