திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 13 லட்சம்
ADDED :3579 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள 36 உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் 13 லட்சத்து 87 ஆயிரத்து 527 ரூபாய், 75 கிராம் தங்கம், 386 கிராம் வெள்ளி இருந்தது. கோயில் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.