சிறுமலையில் அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா
ADDED :3330 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் திண்டுக்கல் அருகே சிறுமலை வெள்ளிமலை அடிவாரம் தியானப்பாறை அருகில் அகத்திய மகரிஷியின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விழா வருகிற 18ம்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 8.30 மணிக்கு கோபூஜையும், மகா யாகமும் நடக்கிறது. பின், 1008 அஷ்ட அதிக சகஸ்ர புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே அகத்திய மகரிஷிக்கு புஷ்ப அபிஷேக் செய்யலாம். பக்தர்களுக்கு, காலையிலிருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்னதானக்குழு, திண்டுக்கல் அகத்தியர் பெருமாள் வெள்ளிமலை கோயில் டிரஸ்டும் இணைந்து செய்கிறது. .தொடர்புக்கு:98425 69344,9786834050