உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் மார்கழி சிறப்பு பூஜை

தேனி கோயில்களில் மார்கழி சிறப்பு பூஜை

தேனி: மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தேனி என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை,தீபாராதனை நடந்தது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உத்தமபாளையம்:  உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், நரசிங்கபெருமாள் கோயில், வாசவி கோயில், மாரியம்மன், பகவதியம்மன் கோயில்கள், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர், வரதராஜப்பெருமாள் கோயில், கம்பம்ரோடு காளியம்மன், மாரியம்மான் கோயில், சங்க விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !