உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி திருவெம்பாவை நிகழ்ச்சி: குன்னுார் கோவிலில் சிறப்பு பூஜை

மார்கழி திருவெம்பாவை நிகழ்ச்சி: குன்னுார் கோவிலில் சிறப்பு பூஜை

குன்னுார்: குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, திருவெம்பாவை நிகழ்ச்சி துவங்கியது. குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது. இதில், காலை, 6:00 மணிக்கு திருவெம்பாவை நிகழ்ச்சி நடந்தது. காலை,7:00 மணிக்கு தீபாராதனை, பிரசாத வினியோகம், நடந்தது. பகல் 12:00 மணிக்கு சவுடேஸ்வரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின், பிரசாத வினியோகம் நடந்தது. இதில், நடராஜர், அம்பாள் சொர்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் குணாசாஸ்திரி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர். இதை தொடர்ந்து,  ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளில், வடமாலை சார்த்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மார்கழி மாத சிறப்பு குறித்து பக்தர் கூறுகையில், மார்கழி மாத நாட்கள் அனைத்தும் மிகவும் சிறப்பானவை. இந்த மாதத்தில், நாள்தோறும், ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே, பூஜை, ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், மேள தாளங்களுடன் அதிகாலை பஜனைகள் கூட வீதிகளில் நடக்கும்.  சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி ஆகியவையும், பெருமாள் கோவில்களில் திருப்பாவையும் பாடப்படும்.  மக்கள் அனைவரும் இந்த நாட்களில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீடுகளின் முன்பு, கோலமிட்டு, மார்கழி பிள்ளையார் வைத்து வழிபடுவர்.  பின்பு, ஆலயம் செல்வது வழக்கம்’ என்றார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !