உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை துவக்கம்

திருப்பூர் ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை துவக்கம்

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், லட்சார்ச்சனை பூஜை, நேற்று துவங்கியது. ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 57ம் ஆண்டு, மண்டல பூஜை விழா நடை பெற்று வருகிறது. மார்கழி முதல் நாளான நேற்று அதிகாலை, மகா கணபதி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கலசத்தில் திருநீர் நிரப்பி, சுவாமியை எழுந்தருள செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், பூக்களால் சுவாமிக்கு லட்சார்ச்சனை துவங்கியது; இன்று மாலை, 7:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழி பட்டனர். அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !