உடுமலை கோவில்களில் மார்கழி சிறப்பு வழிபாடு
உடுமலை: மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடுமலை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நேற்று காலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வழக்கமாக கோவில் முதல் அபிேஷக பூஜை காலை, 10:30 மணிக்கு நடைபெறும். மார்கழியையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு இப்பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் இடம் பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று காலை, 5:15 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவிலில் விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ெசளரிராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உடுமலை நவநீத கிருஷ்ணசாமி கோவிலிலும், சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது. பெரியகடைவீதியில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி ஊர்வலம் வந்தனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அரசமரத்தடியில் வீற்றிருந்த விநாயருக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றிவழிபட்டனர்.