கிறிஸ்துமஸ் சிந்தனை- 3: ஆண்டவரிடம் பேரம் வேண்டாம்
“நீர் எனக்கு இன்னின்ன காரியங்களை நிறைவேற்றி வைத்தால், நான் உமக்கு இன்னின்ன காணிக்கை தருகிறேன்” என்ற ரீதியிலேயே பெரும்பாலானோரின் ஜெபம் அமைகிறது.இங்கிலாந்து ராணி ஒரு வியாபாரியை அழைத்தார்.“நீர் என் துாதுவராக, சில விஷயங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டும்,” என்றார்.“நான் இங்கு இல்லாவிட்டால், என் வியாபாரத்தை பார்த்துக் கொள்ள ஆளில்லையே,” என்றார் வியாபாரி.அந்த பணியை நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம்,” என்றார் ராணி. வியாபாரியும் அப்படியே செய்தார். ஊர் திரும்பியதும், தான் இருந்திருந்தால் கூட இந்தளவுக்கு லாபம் சம்பாதித்திருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார். இதே போல் தான், இயேசுநாதரும் நமக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறார்.“முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்” என்றார்.தேவனின் வார்த்தைகளை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் கேட்டு நடப்போமா!