உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி வழிபாடு: திருப்பூர் கோவில்களில் அதிகாலையில் திரண்ட பக்தர்கள்

மார்கழி வழிபாடு: திருப்பூர் கோவில்களில் அதிகாலையில் திரண்ட பக்தர்கள்

திருப்பூர் : மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்புற கோவில்களில், சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளன; பாசுரங்கள் பாடியபடி, அதிகாலையில், வீதிகளில் பஜனை நடைபெற்றது. "மாதங்களில் நான் மார்கழி என்று, பகவான் கிருஷ்ணர், கீதையில் கூறுகிறார். அந்தளவுக்கு புனிதமானதும், கட வுளுக்கு உகந்ததாகவும், தனுர் மாதம் விளங்குகிறது. இறை வழிபாட்டுக்கு உகந்த மார்கழி மாதம், நேற்று துவங் கியது. இதையொட்டி, அதிகாலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு, சுவாமி திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

சிவன் கோவில்களில், திருவெம்பாவையும், பெருமாள் கோவில்களில் திருப்பாவையும் பாடப்பட்டன. வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, பிள்ளையார் வைத்தும், பூசணிப்பூ வைத்து வழிபட்டனர். அதேபோல், அதிகாலையில், வீதிகளில் இசை வாத்தியங்களுடன், மார்கழி மாத பஜனை நடந்தது. திருப்பூர் அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம் சார்பில், குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி எழுச்சியும்; விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவெம்பாவையும், கன்னிகா பரமேஸ்வரி கோவில், வீரராகவ பெருமாள் கோவிலில், திருப்பாவை பாசுரங்களும் பாடப்பட்டன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், விழா பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர், நேற்று அதிகாலை, நான்கு ரத வீதிகளில், வலம் வந்து, திருவெம்பாவை, சிவபுராணங்களை பாராயணம் செய்தனர். கரிவரதராஜ பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயசுவாமி கோவில், ஐயப்பன் கோவில், சாய்பாபா கோவில் உள்ளிட்ட, அவிநாசி வட்டார கோவில்களில், மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !