உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி திருவிழா: ஆன்மிக தொடர் சொற்பொழிவு

மார்கழி திருவிழா: ஆன்மிக தொடர் சொற்பொழிவு

கோவை: கோவை சுந்தராபுரத்தில் மார்கழி திருவிழா, ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கரங்கள் பவுண்டேஷன் சார்பில், கடந்த இரண்டாண்டுகளாக, மார்கழி மாதத்தில் ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மூன்றாமாண்டு மார்கழி திருவிழா, இன்று துவங்குகிறது. சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில், இன்று மாலை, 5:00 முதல் இரவு, 8:30 மணி வரை, அன்பே சிவம் என்ற தலைப்பில், திருஞானானந்தா சுவாமிகள் சொற்பொழிவாற்றுகிறார். வரும் 25ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் நடக்கும் தொடர் சொற்பொழிவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !