உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா துவங்கியது

அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா துவங்கியது

அன்னுார் : அன்னுார் ஐயப்பன் கோவில், 47ம் ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது. காலை வாஸ்து பூஜை நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. சேவா சங்க நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று (17ம் தேதி) காலை முதற்கால ஹோம பூஜையும், கொடியேற்றமும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கால ஹோம பூஜை நடக்கிறது. 19ம் தேதி மகா கணபதி ஹோமம், ஐயப்பனுக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 20ம் தேதி மதியம் 1:00 மணிக்கு யானை, செண்டை மேளம், ஜமாப் குழுவுடன், சுவாமி ஐயப்பன் திருவீதியுலா கோவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு கோவிலை அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !