உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சுதர்சன ஹோமம்

திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சுதர்சன ஹோமம்

மதுரை : மதுரையில் நகரத்தார் திருமோகூர் பாதயாத்திரைக்குழு சார்பில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் நாளை (டிச.,18) காலை 10:30 மணிக்கு சுதர்சன ஹோமம், நரசிம்மர் ஹோமம் நடக்கிறது.அன்று காலை 6:00 மணிக்கு கே.கே.நகர் கற்பக விநாயகர் கோயிலில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டு, காலை 8:00 மணிக்கு திருமோகூர் சென்றடைகிறது. காலை 9:00 முதல் காலை 10:00 மணி வரை அனுக்ஞை, புண்யாக வாசனம் கும்பபூஜை நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. நிர்வாகிகள் அண்ணாமலை, மீனாட்சிசுந்தரம், சேதுராமன், ஆலோசகர்கள் பிஎல்பி சொக்கலிங்கம், அய்யப்பன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !