உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களையும் மிரட்டிய புயல் உள்ளூர் பக்தர்கள் உஷார்

பக்தர்களையும் மிரட்டிய புயல் உள்ளூர் பக்தர்கள் உஷார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், புயல் வீசிய அன்று, கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அறவே இன்றி, வெறிச்சோடியது. வெளியூர்களில் இருந்து சிலர் மட்டும் காலையில் தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள், உஷாராக வீட்டிலேயே முடங்கினர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள் கோவில்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். கடந்த திங்கள் கிழமை புயல் வீசிய தினத்தில், காலையில் வழக்கம் போல் வெளி மாநில பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். மதியத்திற்கு மேல், மழையும், காற்றும், அதிகரிக்கத் துவங்கியதால் கூட்டம் இல்லை. உள்ளூர் பக்தர்கள் காலையில் இருந்தே வரவில்லை. புயல் காற்று அதிகரிக்கும் என்பதால், வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மாலை வரை வீசிய புயல் காற்றில், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. கோவில்களில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !