சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
ADDED :3247 days ago
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாத சிறப்பு வழிபாடு துவங்கியது. மார்கழி மாதம் நேற்று துவங்கியது. இம்மாதத்தில், சென்னிமலை முருகன் கோவிலில், தினமும் காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். முன்னதாக காலை, 5.30 மணிக்கு கோமாதா பூஜை நடக்கிறது. இதன்படி, நேற்று சிறப்பு பூஜை துவங்கியது. மார்கழி மாதத்தின் நிறைவு பூஜையன்று உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழாக்குழுவினர் செய்துள்ளனர்.