உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதநாதன் அவதாரத்தில் அருள்பாலித்த அய்யப்பன்

பூதநாதன் அவதாரத்தில் அருள்பாலித்த அய்யப்பன்

கோவை: சின்னத்தடாகம், வெள்ளி விநாயகர் கோவிலில் நடந்த விளக்கு பூஜையில், அய்யப்பன் பூதநாதன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, விளக்கு பூஜை நடத்துவது வழக்கம். இதன்படி தடாகத்தில், 32ம் ஆண்டு, ஓம் ஸ்ரீ அய்யப்பன் விளக்கு பூஜை இருநாள் திருவிழா நடந்தது. விளக்கு பூஜை முன்னிட்டு, முதல்நாள் காலை விநாயகருக்கு, 108 தீர்த்தகுட அபிேஷகம்; மாலை, அய்யப்பன் திருத்தேரில் மங்கள தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, செண்டை வாத்தியத்துடன் குழந்தைகளின் தீப ஊர்வலத்தில், அய்யப்பன் பூதநாதன் அவதார சிறப்பு அலங்காரத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாள், அன்னதான பூஜையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மதியம், 12:00 மணியிலிருந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !