கூடலுார் ஐயப்பன் திருவிழா: பக்தர்கள் பரவசம்
ADDED :3577 days ago
கூடலுார்: கூடலுாரில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 25ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா, கூடலுார் விநாயகர் கோவிலில் நேற்று, நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், 10:30 மணிக்கு, கோவிலிருந்து, செண்டை மேளம் முழங்க, ஐயப்பன் ரத ஊர்வலம் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், ஐயப்பன், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மைசூர் சாலை, ஸ்ரீ சக்தி முனீஸ்வரர் கோவில் வழியாக, விநாயகர் கோவிலை அடைந்தது. அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.