வன்னிமலை குமாரசாமி கோவிலில் உழவாரப்பணி
ADDED :3249 days ago
பொங்கலூர்: பொங்கலூர் அருகே கந்தாம்பாளையத்தில், வன்னிமலை குமாரசாமி கோவில், பழமையானது. கோவிலுக்கு செல்லும் வழி நெடுகிலும் புதர் மண்டியும் உள்ளது. இதையறிந்த, சேக்கிழார் புனிதர் பேரவையினர், உள்ளூர் பக்தர்களுடன் இணைந்து உழவாரப்பணிகளை, நேற்று மேற்கொண்டனர். புதர்கள் அகற்றப்பட்டு, பக்தர்கள் மலை மீது செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. பின், கோவில் சுத்தம் செய்யப்பட்டு, சுவருக்கு வர்ணம் பூசப்பட்டு, விளக்கு ஏற்றப்பட்டது. சேக்கிழார் புனித பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் மூர்த்தி, வலுப்பூரம்மன் கோவில்திருப்பணிக்குழு தலைவர் சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.