உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி திருவிழா டிச., 28ம் தேதி துவக்கம்

வைகுண்ட ஏகாதசி திருவிழா டிச., 28ம் தேதி துவக்கம்

உடுமலை: உடுமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. உடுமலை பெரியகடை வீதியில் உள்ளது ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும், 28ம்தேதி முதல் ஜனவரி மாதம், 18ம்தேதி வரை நடைபெறுகிறது. டிச. 28ம் தேதி இரவு, 7:00 மணிக்கு மின்னுருவாய் பாசுரம், தளிகை அம்சை, திருவாராதனம் தீர்த்த கோஷ்டி இடம்பெறுகிறது. தொடர்ந்து பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. வரும் 29ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மச்சாவதாரம் நடக்கிறது. டிச. 30ம் தேதி கூர்மாவதாரம், 31ல் ஸ்ரீஹயக்கீரீவ அவதாரம், ஜனவரி 1ம் தேதி நரசிம்ஹவதாரம், 2ல் வாமனவதாரம், 3ல் பரசுராமவதாரம், 4ல் கோதண்டராமர் அவராதம், 5ல் பலராமவதாரம், 6ம் தேதி கிருஷ்ணாவதாரம், 7 ம்தேதி மோகினி அலங்காரம் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் ஆகியவை இடம் பெறுகின்றன.

ஜனவரி 8 ம் தேதி முதல் இராப்பத்து திருவாய்மொழி உற்சவம் ஆரம்பிக்கிறது. அன்று காலை, 5:00 மணிக்கு ஸ்ரீ பரமபதநாதன் பரமபத வாசல் திறப்பும், மாலை, 6:00 மணிக்கு திருவாய்மொழி முதலாம் பத்து பாசுரங்கள் சேவையும் நடைபெறுகிறது. ஜனவரி 9ம் தேதி மாலை 6:00 முதல் 8:00 மணி வரை தன்வந்திரி அலங்காரம் இடம்பெறகிறது. ஜனவரி 10ம் தேதி ஸ்ரீதிரிவிக்கிரமன், 11ல் மகாவிஷ்ணு, 12ல் ஸ்ரீவித்யா ராஜகோபாலன், 13ல் ஸ்ரீ பாண்டுரங்கன் அலங்காரம் நடக்கிறது. வரும் ஜன. 14ம் தேதி ஸ்ரீ ராப்திநாதன் உத்தானசயனம் தெப்போற்சவம், 15ல் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன், 16ம் தேதி ராமர் பட்டாபிேஷகம், 17ல் விஸ்வரூபம் அலங்காரம் நடைபெறுகிறது. ஜனவரி 18ம் தேதி காலை, 9:00 மணி முதல் 11:00 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, நவவீத கிருஷ்ணசுவாமி கோவில் செயல்அலுவலர், தக்கார், ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !