மாரியம்மன் கோவிலில் திருப்பாவை நிகழ்ச்சி
ADDED :3250 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஓதும் நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் கடை வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தமிழ்ச்சங்கம் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு காலை 5:00 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஓதும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் புருஷோத்தமன், நிர்வாகிகள் உமாபதி, சிவநேசன், தட்சணாமூர்த்தி, செல்வராஜ், ஏழுமலை , கோவில் அறங்காவலர் தலைவர் சின்ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.