உலக நன்மை வேண்டி ருத்ர மஹா யாகம்
ADDED :3251 days ago
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் கருப்பண்ணார் கோவிலில், உலகில் அமைதி நிலவவும், மழை பொழிந்து பயிர் வளம் செழிக்கவும், ருத்ரைகாத சினீஜப ஹோமம் மற்றும் கணபதி ஹோமம், நேற்று காலை, 7:00 மணியளவில் நடந்தது. தொடர்ந்து, அம்பாளுக்கு அனுக்ஞை, சங்கல்பம், ஏகாதச ருத்ர கலச பூஜை, மகன்யாச பாராயணம், ருத்ரபாராயணத்துடன் அபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அதில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.