உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி: வெள்ளை விநாயகருக்கு பூஜை

சங்கடஹர சதுர்த்தி: வெள்ளை விநாயகருக்கு பூஜை

ஆத்தூர்: ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், பால், தயிர், இளநீர், பலரசம் ஆகியவற்றால், விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மலர் மாலைகளால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ராணிப்பேட்டை, கடைவீதி மற்றும் தாயுமானவர் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !