நடுபழநி முருகன் கோவில் சாலை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED :3324 days ago
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் இருந்து செல்லம்பட்டி செல்லும் சாலையில், சூரிய காந்தி மில் அருகே பிரசித்தி பெற்ற நடுபழநி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முகூர்த்த நாட்களிலும், சிறப்பு பூஜை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் சாலை, கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேதமான இந்த சாலையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.